குவைத்திற்குள் நுழைய வேண்டுமானால் கொரோனா வைரஸ் தொற்று இல்லையென்பதை உறுதிப்படுத்துவதற்கான மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும் என்று குவைத் அறிவித்துள்ளது.
இலங்கை, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் குவைத்துக்குள் நுழைவதாக இருந்தால் குறித்த மருத்துவ சான்றிதழை அந்நாட்டு விமானநிலையத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என்று குவைத் அரசாங்கம் வௌியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உரிய மருத்துவச்சான்றிதழ் வழங்க தவறும் பட்சத்தில் அதே விமானத்தினூடாக அந்நபர்கள் அவர்களுடைய சொந்தநாட்டுக்கே திருப்பியனுப்பப்படுவார்கள் என்றும் அவர்களை திருப்பியனுப்புவதற்கான செலவுக்கு குவைத் அரசாங்கம் பொறுப்பேற்காது என்றும் அவ்விமான நிறுவனமே பொறுப்பேற்கவேண்டும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.