ஐக்கிய அரபு இராச்சிய எரிபொருள் விலையில் மாற்றமேற்படுத்தவுள்ளதாக அந்நாட்டு எரிபொருள் விலை நிர்ணய குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இவ்விலை மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய, ஒரு லீற்றர் சுப்பர் 98 பெற்றோலின் விலை 2.24 திர்ஹமிலிருந்து 2.20 திர்ஹமாக குறைக்கப்படவுள்ளது. ஸ்பெஷல் 95 ஒரு லீற்றரின் இன் விலை 2.12 திர்ஹமில் இருந்து 2.09 திர்ஹமாகவும் 2.41 திர்ஹமாகவிருந்த ஒரு லீற்றர் டீசலின் விலை 2.38 திர்ஹமாகவும் குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.