இஸ்ரேல் மற்றும் தென் கொரிய வேலைவாய்ப்பினை இலங்கை இழக்கும் அபாயம் தோன்றியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செயற்பாட்டு பணிப்பாளர், உபுல் தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
சேவைக்காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக இலங்கையர் தங்கியிருந்து பணியாற்றுகின்றமையினால் இந்நிலை தோன்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தென்கொரியாவில் சுமார் 5,000 இலங்கையர் சட்டவிரோதமாக பணியாற்றுகின்றனர் என்று தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.