சவுதி அரேபியாவில் 16 ஆசிய வீட்டுப்பணிப் பெண்களை அடைத்து வைத்து பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகளுக்கு கட்டாயப்படுத்தி பயன்படுத்திய அந்நாட்டு பிரஜையொருவரை சவுதி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சவுதியின் கிழக்கு பிரதேசத்தில் உள்ள குறித்த நபருடைய வீட்டை சோதனை செய்த பொலிஸார் குறித்த பெண்களை விடுவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்களுடைய கடவுச்சீட்டுக்களை வாங்கி வைத்துக்கொண்டு குறித்த சந்தேகநபர் பெண்களை வெளியில் செல்ல விடாது சட்ட விரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சந்தேச நபர் கைது செய்யப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட 16 ஆசியப் பெண்களும் தொழிலாளர் மற்றும் சமூக விசாரணை அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கொலோனல் ஷியாத் அல் ருகாய்டியை மேற்கோட்காட்டி அல் ரியாத் டெய்லி பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
வேலைத்தளம்