புலம்பெயர்ந்து அபுதாபியில் பணியாற்றும் இலங்கையருக்கான பல நலன்புரி செயற்பாடுகளை அபுதாபிக்கான இலங்கை தூதரகம் முன்னெடுத்து வருகிறது.
24 மணிநேர உடனடி உதவி இலக்கம், மருத்துவ முகாம், உளவள ஆலோசனை உட்பட பல செயற்பாடுகள் தூதரகத்தினூடாக முன்னெடுக்கப்படுகின்றன என்று இலங்கை தூதரகத்திற்கான முன்னெடுக்கப்படுவதாக தூதரகத்திற்கான ஆலோசகர் (தொழிலாளர்) எச்.கே. கே. அசோக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மட்டும் இந்நலன்புரி செயற்பாடுகளை பெற்றுக்கொள்வதற்காக சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தூதரகத்திற்கு விஜயம் செய்துள்ளனர் என்றும் வௌ்ளிக்கிழமைகளிலேயே தமது நலன்புரி செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 72வது சுதந்திர தினம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இராஜதந்திர உறவுகளின் 40 ஆண்டு நிறைவு என்பவற்றை முன்னிட்டு அண்மையில் இரத்ததான் முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுமார் 300,000 இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் 60,000 பேர் அபுதாபியியில் பணியாற்றுகின்றனர். அவர்களில் சுமார் பத்தாயிரம் பேர் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெறம் பொருட்டு எமது தூதரகத்தை நாடியுள்ளனர்.
வாராந்தம் சுமார் 200 இலங்கையர்கள் உதவிக்காக எமது தூதரகத்தை நாடுகின்றனர். அல் அயின்னில் சேவைகள் வழங்குவதற்காக எம்மிடம் 15- 20 நிபுணர்கள் உள்ளனர். இதேவேளை, தூதரகம் மற்றும் துணைத் தூதரக அதிகாரிகள் கைத்தொழில் பிரதேசங்களான தத்பீர், தவஜிஹ. மற்றும் ட்வாபோக் என்பவற்றுக்கு விஜயங்களை மேற்கொண்டுள்ளனர். தூதுவர் தலைமையிலான குறித்த குழு அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.
தொடர்ந்தும் விழிப்புணர்வு நிலையங்களும் தூதரகமும் இணைந்து செயற்றிறன் மிக்க சேசைகளை தொழிலாளர்களுக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறது.
இலவச உடனடி உதவி தொலைபேசி இலக்கமான 800119119 கடந்த வருடம் மட்டும் சுமார் 36,000 தொலைபேசி அழைப்புகள் உதவி கோரி அழைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களையும் தற்போது இந்த இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.