வேலை நேரமற்ற நேரங்களில் தனியார் துறையில் பணியாற்றுவதற்கான அனுமதியை சவுதி அரசாங்கம் அந்நாட்டு அரச ஊழியர்களுக்கு வழங்கவுள்ளது.
பகுதி நேர அடிப்படையில் தனியார் துறையில் அல்லது தமது சொந்த வியாபாரப்பணியில் ஈடுபட விரைவில் அனுமதி வழங்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது,
பொதுச்சேவை சட்டமூலம் 13ம் சரத்தில் இவ்வனுமதிக்கான திருத்தங்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு அமைச்சர்களை அங்கத்துவர்களாக கொண்ட சவுரா சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என்று அல் ரியாத் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த ஒரு சில துறைகளைச் சேர்ந்த அரச ஊழியர்களுக்கே இவ்வனுமதி வழங்கப்படவுள்ளது.