இந்திய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து 12 அம்ச கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் இன்று (04) ஈடுபட்டுள்ளன.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்ய வேண்டும், வீதி பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறவேண்டும், தொழிலாளர் சட்டங்களை முழுமையாக அமுல்படுத்த வேண்டும், பொதுத்துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது, குறைந்தபட்ச ஊதியமாக மாதம் 18 ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.
இப்போராட்டத்தில் கலந்துகொண்ட சுமார் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்