குவைத் வீட்டு வாடகையில் வீழ்ச்சி

குவைத்தில் வீட்டு வாடகை இவ்வாண்டின் நடுப்பகுதியில் 25 வீதத்தினால் குறையும் சாத்தியம் காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலங்களில் அந்நாட்டில் நிலம் மற்றும் கட்டிடத் துறையில் காணப்பட்ட பின்னடைவே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. வீட்டு வாடகை குறைந்திருப்பதனால் தற்போது குவைத் நாட்டிலுள்ள சுமார் ஒரு லட்சம் அடுக்குமாடி வீடுகள் ஆளின்றி காணப்படுவதாகவும் எதிர்வரும் காலங்களில் கட்டிடத்துறையில் ஸ்தீரத்தன்மையேற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும் வீடுகள் தொடர்பில் சந்தேகமே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குவைத்தில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களாகிய நீங்கள் குறைந்த வாடகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய வீட்டை வாடகைக்கு எடுத்து வாழக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது.

இதையும் விட குறித்த பொதுப்பணத்தை முறையாக முகாமைத்துவம் செய்வதற்காக குவைத்தின் ஒழுக்காற்று தொடர்பான சபை விசேட வேலைத்திடடமொன்றையும் ஆரம்பித்துள்ளது. இத்தகைய சந்தர்ப்பங்களில் பொதுப்பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுப்பதே இதன் நோக்கமாகும்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435