இனிப்பு பொருட்களுக்கு விசேட வரி- UAE தீர்மானம்

இனிப்பு கலந்து உற்பத்திகள் மற்றும் புகைத்தல் பொருட்களுக்கான கலால் வரியை அடுத்த வருடம் தொடக்கம் 50 வீதத்தினால் அதிகரிக்க ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நீண்ட கால நோய் தாக்கங்களை குறைப்பதற்கான குறித்த உற்பத்திகளின் பாவனைகளை குறைக்கும் நோக்கில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, இனிப்பு கலந்து உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகையான குடிபானங்கள், திரவங்கள், அடர்தீவனங்கள், தூள்கள், சாறுகள் என்பவற்றுக்கு 50 வீத வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிகோடின் அல்லது புகையிலை கலந்த புகைத்தல் பொருட்கள், இலத்திரனியல் புகைத்தல் கருவிகள் போன்ற ஆரோக்கியத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் அனைத்துக்கும் 100 வீத கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இனிப்பு கலந்த உற்பத்திகள் எனும் போது டொபிகள், பிஸ்கட் வகை, கேக், சிற்றுண்டிகள், டின்களில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், ஐஸ்கிறீம், யோகட் மற்றும் மில்க்ஷேக் உட்பட அனைத்திற்கும் இவ்வரி விதிக்கப்படுகிறது என்று பட்டய வீட்டு வரி ஆலோசனை சபையின் முகாமைத்துவ அங்கத்துவர் அநுராக் சத்துர்வேதி தெரிவித்துள்ளார்.

ஊக்கப் பானங்களுக்கான வரி விதிப்புக்கு பின்னர் பாவனை 65 வீதத்தினால் குறைவடைந்ததை நாம் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. வர்த்தகர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதிக்குள் தாமதப்படுத்தாமல் குறித்த புதிய நடைமுறைக்கு தயாராக வேண்டும். வரி விதிப்பு காரணமாக குறித்த பொருட்களின் விலை ஏற்கனவே அதிகம். தற்போதைய கலால் வரி விதிப்பின் பின்னர் மேலும் விலை அதிகரிக்கப்படுகின்றமையினால் நுகர்வோர் பாவனை வேகமாக குறைவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் சத்துர்வேதி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435