உணவு உண்பது தொடர்பில் கவனமாக இருங்கள்

றமழான் காலத்தில் நோன்பு நேரங்களில் பொது இடங்களில் சாப்பிடுவது ஓமான் சட்டப்படி குற்றமாகும்.

அந்நாட்டுக்கு புதிதாக விஜயம் செய்வோர் மற்றும் முஸ்லிம் அல்லாதோர் இது தொடர்பில் கவனமாக இருப்பது அவசியம். அவர்கள் உணவை உணவகங்களுக்குள் உண்ணலாம். உணவகத்திற்கு வௌியே நோன்பிருப்போர் காணும் வகையில் உண்பது தடை செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, 9 வயதுக்கு குறைந்த பிள்ளைகளைத் தவிர ஏனையோர் நோன்பு திறக்கும் முன்னர் பொதுவிடங்களில் உண்பதோ, குடிப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கைது செய்வதற்கும் அனுமதியுள்ளது.

அந்நாட்டின் 49ம் இலக்க சட்டத்தின் படி குற்றங்களுக்கான தண்டனை 9 வயதின் பின்னர் ஆரம்பமாகிறது.

அவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்கு 10 நாட்கள் தொடக்கம் 3 மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுதுடன் காரினுல் உண்பதும் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435