இந்தியாவின் மிகப் பெரிய கப்பல் நிறுவனத்தின் 200 மாலுமிகள் கடந்த சனிக்கிழமை தொடக்கம் உண்ணாவிரத போராட்டதை ஆரம்பித்துள்ளனர்.
தேசிய கடற்சார் சபை மாலுமிகளின் ஊதியத்தை 30 வீதத்தினால் அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்த்தில் கையெழுத்திட்ட போதிலும் குறித்த நிறுவனம் ஊதியத்தை உயர்த்த தவறியதையடுத்தே இவ்வுண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வொப்பந்தம் கடந்த 2015ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போதிலும் இதுவரை சம்பளம் உயர்த்தப்படவில்லை. இதனையடுத்து கப்பற்றுறை கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 16 கப்பல்களின் ஊழியர்கள் தமது சம்பள உயர்வை கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.
வேலைத்தளம்