ஐக்கிய அரபு இராச்சியத்தில் பண விரயத்தை தவிர்க்க…

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வாழ்வது என்பது சாதாரண விடயமல்ல. அங்கு சம்பாதிப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பது போலவே செலவும் அதிகம்தான். இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற வளர்முக நாடுகளைச் சேர்ந்த பல இலட்சக்கணக்கானவர்கள் தொழில்வாய்ப்பை நாடி இந்நாட்டுக்கு சென்றுள்ளனர். சொந்த நாடுகளை விட்டு, உறவு குடும்பங்களை விட்டு கடல்கடந்து தொழிலுக்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள நாம் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பது எப்படி? செலவுகளை குறைப்பது எவ்வாறு? என்பதை நாம் அறிந்திருக்காவிட்டால் எம் நிலைமை அதோகதிதான்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நகரில் தாம் சம்பாதிக்கும் பணத்தில் செலவுகளை குறைத்து சேமிப்பது எவ்வாறு என்பது தொடர்பில் பொருளாதார நிபுணர்கள் வழங்கியுள்ள தகவல்கள் நீங்கள் பயன்பெறுவதற்காக தமிழில் கீழே தரப்பட்டுள்ளன.

டுபாயில் அதிக பணத்தை விரயமாக்கும் ஒரு விடயமாக மின்சக்தியை பார்க்கலாம். அங்கு நிலவும் வெப்பத்தின் காரணமாக பெரும்பாலான இடங்கள் குளிரூட்டப்பட்டனவாக உள்ளன. இதனால் மாதாந்த மின்சார கட்டணம் எகிறும் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.

நன்பகல் 12.00 மணி தொடக்கம் பின்நேரம் 6.00 மணி வரை மின்சார கட்டணம் உச்சமாக காணப்படும். அத்தருணத்தில் குறைவாக மின்சாரத்தை சேமிக்கலாம். உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் குளிரூட்டியை 24 செல்சியஸ்ஸாக வைத்திருப்பது அதிக மின்பாவனையை குறைக்கும். அது மட்டுமன்றி ஏனைய மின்பாவனைப் பொருட்களை மேலே குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்வது சிறந்தது.

அது மாத்திரமன்றி நீங்கள் பயன்படுத்தும் குளிரூட்டியினை எப்போதும் “on” மோடில் வைக்காமல் “auto” வைத்துக்கொள்ளுங்கள். அது அறையின் வெப்பநிலையை சிறப்பாக வைத்திருக்க உதவும்.

நீங்கள் பயன்படுத்தும் வீட்டுப்பாவனை பொருட்களை பயன்படுத்தாத நேரங்களில் வெறுமனே ஸ்விட்ச் ஓப் செய்து வைக்காமல் ப்ளக்குகளில் இருந்து கழற்றி வையுங்கள்

உங்களுடைய வீட்டுத் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதாக இருந்தால் காலை அல்லது இரவு நேரமே சிறந்தது.

மின்சாரத்தை சேமிக்கக்கூடிய மின்குமிழ்களை பயன்படுத்துங்கள்.

துணிகளை கழுவும் போது 30-40C மட்டுமே பயன்படுத்துங்கள். சலவை இயந்திரத்திற்கு அவசியமான துணிகள் சேரும் வரை அதனை ஒன் செய்யாதீர்கள்.

மலசலகூடங்களுக்கு dual flush button பயன்படுத்துங்கள். வீட்டுப்பாவனை நீரில் 30 வீதமானவை மலசலகூடங்களுக்கே பயன்படுத்தப்படுகின்றன. dual flush button மூலம் நீர் சேகரிக்கப்படுகிறது.

நீர் குழாய்களுக்கு காற்றுவழிகளை உள்ளகப்படுத்துங்கள். காற்றின் அழுத்தத்தினால் நீர் பாவனையில் ஏற்படும் அழுத்தத்தை தவிர்ப்பதற்கு இது சிறந்த வழியாகும்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435