வடக்கு அரபிக் கடலூடாக ஓமான் நோக்கி ஏற்பட்டுள்ள மஹா சூறாவளிக்காற்றின் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிழக்கு கடற்பகுதியில் கடுமையான அலை வீசக்கூடும் என்று அந்நாட்டு காலநிலை அவதானிகள் எச்சரித்துள்ளனர்.
இன்று காலை தாக்கியுள்ள இச்சூறாவளி காரணமாக மணிக்கு 130 கிலோ மீற்றர் காற்று வீசுவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
வடமேற்காக நாளை காலை மஹா சூறாவளி மீண்டும் வீசும் என எதிர்பார்ப்பதாகவும் நாளை மறுநாள் புதன் கிழமை வட கிழக்காக வீசும் என எதிர்பார்ப்பதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.