நாளை (05) சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறைத் தினமாக ஐக்கிய அரபு இராச்சிய அறிவித்துள்ளது.
இஷ்ரா வல் மிராஜ் புனித தினத்தை முன்னிட்டு அரசு மனித வளங்கள் மத்திய அதிகாரசபை இவ்வறிவித்தலை விடுத்துள்ளது.
குறித்த விடுமுறைத் தினம் இன்று (04) என்ற போதிலும் அரபு இராச்சிய அரச சட்டத்தின் படி பொது விடுமுறை நாள் இரு வேலைநாட்களுக்கு இடையில் வரும் போது கிழமை ஆரம்பம் அல்லது இறுதிக்கு மாற்ற முடியும்.
முகம்மது நபி ஜெருசலேமில் இருந்து மக்கா நோக்கி ஒரே இரவில் வந்தடைந்த தினமே இஷ்ரா வல் மிராஜ் எனப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்