ஓமானில் சுரண்டல்களுக்குள்ளாகும் வீட்டுப் பணிப்பெண்கள்

ஓமானில் புலம்பெயர் வீட்டுப் பணியாளர்கள் தவறாக அகப்பட்டு பல்வேறு துஷ்பிரயோகங்களுக்குள்ளாகின்றனர் என்று ஹியுமன் ரைட்ஸ் வொட்ச் இன்று (13) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

68 பக்கங்களைக் கொண்ட ‘நான் விற்கப்பட்டேன்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் வீட்டுப்பணியாளர்களில் குரல் அடங்கிப் போயுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் எவ்வாறு வீட்டுப் பணியாளர்கள் பணிக்கு உள்வாங்கப்படுகின்றனர், அந்நாட்டு தொழிலாளர் முறைமை, தொழிலாளர் சட்டங்களில் காணப்படும் குறைவான பாதுகாப்பு, பணியாளர்கள் எவ்வாறு எஜமானர்களினால் சுரண்டல்களுக்கும் , துஷ்பிரயோகங்களுக்கும் உட்படுத்தப்படுகின்றனர். அவர்கள் வேலையை மாற்ற வேண்டுமானால் ஒப்புதல் அவசியம் போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

பல்வேறு துன்பங்களை அனுபவிக்கும் பணியாளர்கள் வெளியேற அல்லது தலைமறைவாக முயற்சிக்கும் பட்சத்தில் பல்வேறு சட்ட நடவடிக்கைகளுக்கு முகம்கொடுக்கின்றனர் என்றும் எஜமானர்களினால் அடித்து துன்புறுத்தப்படுவதுடன் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். மேலும் சம்பளம் வழங்கப்படாமலும் வேலை நேரத்தை அதிகரித்தும் துன்புறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு பணிக்கு அமர்த்தப்படும் பணிப்பெண்கள் குழந்தைகளை பராமரிப்பதுடன் சமையல் வேலைகள், வீட்டு வேலைகள் என அனைத்தையும் சிறிய சம்பளத்திற்கு செய்யவேண்டியுள்ளது. அவர்களின் சொந்த குடும்ப நிலை காரணமாக இந்நிலையை தாங்கிக்கொண்டு வேலை செய்கின்றனர்.

ஓமானில் 130,000 பெண்கள், அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையானவர்கள் வீட்டுப்பணிப்பெண்களாக ஓமானில் பணியாற்றுகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் பிலிப்பைன், இந்தோனேசியா, இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்தவரக்ள் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைத்தளம்/ www.hrw.org

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435