ஓமானில் தொழில் செய்பவர்கள் மற்றும் தற்காலிக வீசாவை பயன்படுத்தி பணியாற்றுபவர்கள் அனைவரும் தமது பதிவை புதிப்பித்துக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு பொலிஸ் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
அந்நாட்டு சிவில் நிலைமைகள் பணிப்பாளர் நாயகம் காரியாலயத்திலேயே ( Directorate General of Civil Status ) தமது பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும் தற்போது குடும்ப வீசாவை ( family joining visas ) பயன்படுத்தி தங்கியிருப்போர் அப்பதிவை மேற்கொள்ளத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைத்தளம்