கடன்சுமையால் நாடு திரும்ப முடியாது அவதியுறும் இலங்கை குடும்பம்

அதிக கடன் சுமை காரணமாக தாய் நாட்டுக்கு திரும்ப முடியாமல் டுபாயில் துன்புறும் இலங்கை குடும்பம் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மொஹமட் பெராட் அப்பாஸ், அவருடைய மனைவி இஷாரா விஜேதுங்க மற்றும் அவர்களுடைய 5, 6 வயது ஆண் குழந்தைகளே இவ்வாறு தாய்நாட்டுக்கு திரும்ப முடியாது அல்லலுறுகின்றனர்.

கடந்த 2008ம் ஆண்டு டுபாய் சென்ற மொஹம்மட் பெராட் அப்பாஸ் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு வேலையிலழந்த அப்பாஸ் அவருடைய மனைவியுடன் இணைந்து வியாபாரமொன்றை ஆரம்பித்துள்ளார். ஆரம்பத்தில் இலாபம் பெற்றுக்கொடுத்த வியாபரம் திடீரென நட்டமடைந்துள்ளது. இதனால் கடனட்டை மற்றும் வங்கிக் கடன்களை செலுத்த முடியாது போனதால் மீண்டும் தாய்நாட்டுக்கு திரும்புவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் தடை விதித்துள்ளது.

கடன் சுமை காரணமாக சுமார் 10 மாதங்கள் சிறை வைக்கப்பட்டிருந்த இஷாரா விஜேதுங்கவிற்கு வௌியில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளுடன் மீண்டும் தாய் நாட்டுக்கு திரும்ப வேண்டுமாயின் இஷாரா 52,000 திர்ஹம்கள் செலுத்த வேண்டும். தற்போது அவர்களுடைய வீஸாக்களும் காலாவதியாகியுள்ளது. பெற்றோரின் கடன்சுமை காரணமாக பிள்ளைகள் பாடசாலைக் கல்வியையும் இழந்துள்னர். குடும்ப நன்பர்களின் உதவியுடன் பெற்றுக்கொண்ட சிறிய அறையில் தங்கியுள்ள அவர்கள் எந்தவொரு வருமானமும் இல்லாத காரணத்தினால் எவ்வாறு கடன்களை செலுத்துவது? துபாயில் தங்கியிருப்பது என தெரிவியவில்லை என்று சர்வதேச ஊடகங்களிடம் அப்பாஸ் கவலை வௌியிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435