கடமை நேரத்தில் விபத்துக்கள் ஏற்படின் உடனடியாக கைத்தொழில் மற்றும் பொலிஸில் அறிவிப்பதனூடாக மருத்துவச் செலவை நிறுவனம் வழங்குவது கட்டாயமாகும் ஐக்கிய அரபி எமிர் இராச்சியத்தின் சட்டமாகும்.
அந்நாட்டு தொழிலாளர் சட்டத்தின் 142 வது சரத்தின் படி கடமையின் போது ஏற்படும் விபத்துக்களின் போது அதற்கான மருத்துவச் செலவை அந்நிறுவனங்களே வழங்க வேண்டும். இதற்குள் போக்குவரத்து செலவு, மருத்துவ செலவு என்பன உள்ளடங்குகின்றன. இது தவிர ஊழியர் சுகயீனமுற்றிருக்கும் காலப்பகுதியில் கொடுப்பனவு ஒன்றையும் வழங்குவது அவசியமாகும்.
ஊழியருக்கு உயிராபத்து ஏற்படின் குடும்ப உறுப்பினர்களுக்கு குறித்த ஊழியரின் 24 மாத சம்பளத்தை வழங்குவது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்