கடைகளை கொள்ளையடித்த இந்திய பிரஜை கைது

அபுதாபியின் தலைநகரில் உள்ள 11 கடைகளில் கொள்ளையிட்ட இந்திய பிரஜையொருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடைகளின் ஜன்னல்களை ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியுடைத்து பணத்தை திருடிய 30 வயதான இந்திய பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ச்சிய கிடைத்த முறைப்பாடுகளையடுத்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையை அடுத்து இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைநகரின் அல் கலிதியா பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் காசோலை மோசடியிலும் ஈடுபட்டு வந்தார் என்றும் எஜமானாரிடமிருந்து தப்பியோடியவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மருந்தகங்கள், அழகு நிலையங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையங்களில் இதுவரை சுமார் 50,000 டோஹா கொள்ளையடித்ததாக விசாரணையின் போது சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

விற்பனை நிலையங்களுக்கருகில் சந்தேகத்துக்கிடமான நிலையில் யாரும் நடமாடுவதை அவதானித்தால் உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435