கட்டாரில் புதிய போக்குவரத்து விதிமுறைகள்

கட்டார் வீதி போக்குவரத்து ஒழுங்குகளை முறையாக பேணும் நோக்கில் அந்நாட்டு போக்குவரத்து திணைக்களம் புதிய போக்குவரத்து விதிமுறைகள் அறிமுகப்படுதியுள்ளது.

இப்போக்குவரத்து விதிமுறைகளில் வீதி போக்குவரத்து விதி மீறல்கள் 30 வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இலகு வாகனங்களுக்கான அபராத முறைகள் மற்றும் வாகனங்களை அரசுடைமையாக்குதல் என்பவை தொடர்பில் இந்த விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

போதையில் வாகனம் செலுத்துவதனால் ஏற்படும் விபத்துக்கள், வாகனத்தில் தேவையில்லாதவைகளை காட்சிப்படுத்தல், மோதி விட்டு தப்பிச் செல்லுதல் என்பவற்றுக்கு புதிய விதிமுறைகள் செல்லுபடியாகின்றது. இவற்றுக்கான தண்டனையாக 300 – 6000 கட்டார் ரியால் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் குற்றங்களுக்கமைய வாகன அனுமதிப்பத்திர புள்ளிகள் குறைக்கப்படுவதுடன் வாகனத்தில் ஒளியின்றி பயணம் செய்வது பிரதான குற்றமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு கூடிய அபராதம் விதிக்கப்படுவதுடன் வாகன அனுமதிப்பத்திரத்தில் இருந்து 7 புள்ளிகள் குறைக்கப்படும்.

வாகனம் செலுத்தும் போது தொலைக்காட்சியை பார்த்தால் 500 கட்டார் ரியால் அபராதமாக விதிக்கப்படும்.

இதுவதவிர பயணிகளும் போக்குவரத்து விதிமுறைகளை கவனமாக அறிந்து பின்பற்றுவது அவசியம். கட்டார் வாழ் புலம்பெயர் தொழிலாளர்கள் இது தொடர்பில் கவனமாக இருப்பதுடன் ஏனையவர்களும் தெரியப்படுத்துங்கள்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435