கட்டார் ராச்சியத்தில் 25, 000 நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
அந்நிறுவனங்களில் போலி ஆவனங்கள் வைத்திரிந்தமை கண்டறியப்பட்டதையடுத்தே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் சட்டத்தை மீறியுள்ளதுடன் சம்பள பாதுகாப்பு முறை (WPS) பின்பற்றப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. கட்டார் சட்டத்திற்கமைய தொழில் செய்யும் நிறுவனமானது தொழிலாளியின் சம்பளததை நிதி நிறுவனமொன்றினூடாக அவருடைய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்தல் அவசியம்.
அவ்வாறு நடைமுறை பின்பற்றப்படாத பட்சத்தில் ஒரு மாத சிறைத் தண்டனை அல்லது 6000 வரை அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் மிகுதி சம்பளப்பணத்தை திருப்பி செலுத்த வேண்டியிருப்பதுடன், வீசா பெற்றுகொடுத்து புதிய பணியாளர்களை வேலைக்கமர்த்துவதும் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்