குவைத்திலிருந்து திடீரென வெளியேற்றப்பட்டால் மீண்டும் செல்வது சாத்தியமா?

ஏதாவது ஒரு காரணத்தினால் குவைத் நாட்டை விட்டு நீங்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டால் மீண்டும் அந்நாட்டு செல்வது சாத்தியமா? அதற்கான வழிமுறைகள் உண்டா என்பதை நீங்கள் அறிவீர்களா?

கவனயீனமாக செய்யும் சில செயல்கள்… தெரிந்தோ… தெரியாமலோ மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நீங்கள் அந்த நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற காரணமாக அமையலாம். அவ்வாறு அமையும் பட்சத்தில், நிர்வாக ரீதியாக நீங்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டால் ஒரு வருடத்தின் பின்னர் அந்நாட்டு உள்நாட்டு விவகார அமைசினூடாக மீண்டும் குவைத் செல்வதற்கான அனுமதியை பெறலாம். ஆனால் தீர்மானம் அமைச்சிடமே உள்ளது. உங்களுக்கு அனுமதி வழங்க அமைச்சு விரும்பாத பட்சத்தில் நீங்கள் செல்ல முடியாது.

சட்ட ரீதியான, நீதிமன்றத்தினூடாக நீங்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டால் என்றுமே அந்நாட்டுக்கு செல்ல முடியாது. அந்நாட்டுக்கு மட்டுமல்ல, எந்தவொரு மத்திய கிழக்கு நாட்டுக்கும் நீங்கள் செல்ல முடியாது என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435