
கொரியாவில் வேலைவாய்ப்புக்களை பெறுவதற்காக நடத்தப்படும் கொரிய மொழி பரீட்சையில் தோற்றுவதற்கான பதிவுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேற்று (25) ஆரம்பமான பதிவு நடவடிக்கைகள் நாளை (27) வரை நடைபெறும். இலங்கை வெளிநாட்டு வாய்ப்பு அமைச்சு மற்றும் கொரியாவின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சு என்பவற்றுக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைய இப்பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பரீட்சை தொடர்பான விபரங்கள் ஓகஸ்ட் 11ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இப்பரீட்சைக்கு 26 ஜூலை 1976 தொடக்கம் 27 ஜூலை 1998 வரை பிறந்தவர்கள் பதிவு செய்ய முடியும்.
மேலதிக விபரங்களுக்கு கீழ்வரும் இணைப்பை அழுத்துக.
வேலைத்தளம்