டுபாய் தொழிலாளர்கள் சட்டரீதியான நடைமுறைகளையும் சட்டரீதியான உரிமைகளையும் பெறும் முறையை பின்பற்ற ஆரம்பித்துள்ளார்கள் என்று அந்நாட்டு பொலிஸ் மனித உரிமை திணைக்களம் தெரிவித்துள்ளது.
டுபாய் பொலிஸ் தொடர்ச்சியாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் முகாம்களை நடத்தி வந்ததன் பெறுபேறாக தொழிலாளர்கள் தெளிவு பெற்றுள்ளனர் என்றும் தமது உரிமைகள் தொடர்பில் தாங்களே முன்நிற்பதற்கும் சட்ட ஒழுங்கு முறைகளை பின்பற்ற ஆரம்பித்துள்ளனர் என்று மனித உரிமை பொதுத் திணைக்களத்தின் தற்காலிக வேலைவாய்ப்பு சட்ட நிபந்தனைக் கட்டுப்பாட்டு பிரிவின் தலைவர் லெப்டினன்ட் கொலோனல் ரஷீத் அல் ஹெல்லி கூறினார்.
உலக தொழிலாளர் ஸ்தாபனம் டுபாயில் ஏற்பாடு செய்திருந்த உலக வேலையில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் 2016 தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.
வேலைத்தளம்