நியூஸிலாந்தில்  தற்காலிக தொழில் விசாவில் மாற்றம்

வெளிநாட்டு பணியாளர்களுக்கான தற்காலிக தொழில் விசா (temporary work visa- ) வழங்கும் நடைமுறையில் முக்கிய மாற்றங்களை நியூசிலாந்து அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.

இதன்படி தொழில் வழங்குநர்களும் விண்ணப்பதாரிகளும் இலகுவாக விண்ணப்பிக்கும்வகையில் தொழில் வழங்குநர் தலைமையிலான விசா கட்டமைப்பு employer-led visa framework அறிமுகப்படுத்தப்படுவதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உள்ள 6 விசா பிரிவுகளுக்குப் பதிலாக நடைமுறைப்படுத்தப்படும் இப்புதிய மாற்றத்தின் கீழ் தொழில் வழங்குநர், பணியாளர் மற்றும் பணி குறித்த பரிசோதனைகளை மேற்கொள்வது இலகுவாக்கப்படுகின்றது.

அத்துடன் இந்த தற்காலிக விசாவுக்கான வருடாந்த ஊதிய வரம்பும் அதிகரிக்கப்படுகிறது.

இப்புதிய மாற்றத்தின் மூலம் நியூசிலாந்திலுள்ள சுமார் முப்பதாயிரம் வர்த்தக நிறுவனங்கள் தமக்கான பணியாளர்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியுமென அந்நாட்டு குடிவரவு அமைச்சர் லெய்ன் லீஸ் கலோவே Iain Lees-Galloway தெரிவித்தார்.

அதேநேரம் 2020 முதல் அறிமுகப்படுத்தப்படும் மற்றுமொரு மாற்றத்தின் கீழ் நியூசிலாந்திலுள்ள lower-paid- குறைந்த சம்பளம் பெறும் பணியாளர்களும் தமது குடும்பத்தை நியூசிலாந்துக்கு வரவழைத்துக்கொள்வதற்கு வழிவகை செய்யப்படுகின்றது.

இதன்மூலம் வெளிநாடுகளிலிருந்து பணிபுரிவதற்காக வருபவர்கள் நிரந்தரமாக நியூசிலாந்திலேயே தங்குவதற்கான வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் குறித்த விசாவானது தொழில்வழங்குநரின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் ஒன்று எனவும் இதனை general skilled work விசாவுடன் சேர்த்து எவரும் குழப்பிக்கொள்ளக்கூடாது எனவும் குடிவரவு முகவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435