சவுதி மரண தண்டனையில் தப்பி வந்த ராணியை சந்தித்தார் அமைச்சர்

சவுதி அரேபியாவில் மரண தண்டனை வழங்கப்பட்டு விடுதலையாகி நாடு திரும்பிய இலங்கை பெண்ணான மாணிக்கம் ராணியின் வீட்டுக்கு சென்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள அவரை சந்தித்தார்.

கலேவல, கொலென்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த மாணிக்கம் ராணியை கடந்த 27ஆம் திகதி வீட்டுக்கு சென்ற அமைச்சர் அவரது எதிர்கால வாழ்க்கை தொடர்பில் ஆராய்ந்தார்.

மேலும் அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதுடன் வீட்டு வேலைகளை பூர்த்தி செய்வதாகவும் அமைச்சர் இதன் போது உறுதியளித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டலில் சவுதியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியினூடாக ராணி காப்பாற்றப்பட்டார். இதற்கு முன்னர் கல்லடித்து கொல்ல உத்தரவிடப்பட்டிருந்த பெண்ணை எம்மால் மீட்க முடியாமல் போய்விட்டது என்றார்.

தன்னை மீட்க அனைத்து விதத்திலும் பாடுபட்ட அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்த ராணி தனது எதிர்கால வாழ்க்கைக்கு உதவி வழங்க முன்வந்த அமைச்சருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி சவுதி சென்ற ராணி பணியாற்றிய வீட்டில் 9 மாத குழந்தை பால் புரையேறியமையினால் உயிரிழந்ததையடுத்து நவம்பர் மாதம் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டார். குழந்தையை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ராணிக்கு 10 வருட சிறைத்தண்டனையும் மரண தண்டனையும் வழங்குமாறு ராணியின் தொழில் வழங்குநர் கோரியுள்ளார். இந்நிலையில் சவுதியிலுள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டினால் தண்டனையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ராணிக்கு இரு வருட சிறைத்தண்டனை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தண்டனை காலம் முடிந்து மீண்டும் நாடு திரும்பிய ராணிக்கு தற்போது 29 வயது. அவருக்கு 2 வயதில் குழந்தை இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

,

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435