ஹோட்டல் துறை வருவாய் டுபாயில் வீழ்ச்சி

டுபாயில் ஹோட்டல் துறை வருவாய் இவ்வருடம் வீழ்ச்சியடைந்து வருவதாக ஹோட்டல் உயர்மட்ட அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10-12 சத வீத வீழ்ச்சி ஏற்படும் வாய்ப்புக்கள் காணப்படுகிறது என்று ரொடானா ஹோட்டல் குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான ஓமர் கட்டோரி கருத்து வெளியிட்டுள்ளார்.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் 10 வீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் எனினும் தற்போதுள்ள நிலை குறித்து தான் மகிழ்ச்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எண்ணெய் விலை குறைந்துள்ளது. ரஷ்யா பிரஜைகள் வருவதில்லை.விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் டுபாயில் 10000 அறைகளும் அபுதாபியில் 4000 அறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இங்கு நிறைய இரண்டு மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல் காணப்படுகின்றன. எனினும் அவற்றின் அறைகளும் சொகுசு அறைகளின் விலைக்கே கொடுக்கப்படுகின்றன.

ரொடானா ஹோட்டல் குழும பணியாளர்களை பணியிலிருந்து நீக்கும் எண்ணம் எமக்கில்லை. எனினும் புதிதாக சேர்த்துக்கொள்வதை மறு அறிவித்தல் வரை நிறுத்தியுள்ளோம்.

மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் 19 ஹோட்டல்களை நிறுவ ரொடான குழுமம் திட்டமிட்டுள்ளது என்று ஓமர் கட்டோரி மேலும் தெரிவித்தார்.

வேலைத்தளம்/Gulf News

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435