சுற்றுலா வீசாவில் பணியாற்ற முடியுமா?

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொழிலாளர் சட்டத்தின் 11வது இலக்க சரத்திற்கமைவாக சுற்றுலா வீசாவில் சென்று எந்தவொரு தொழிலையும் செய்ய முடியாது என்பதை நீங்கள் அறவீர்களா?

சுற்றுலா வீசாவில் தொழில் செய்ய அந்நாட்டு தொழிற்றுறை அமைச்சு அனுமதி இதுவரையில் வழங்கவில்லை.

எனினும் சில நிறுவனங்கள் இவ்வாறாக சுற்றுலா வீசாவை பயன்படுத்தி தொழிலாளர்கள் வரவழைத்து பணிக்கமர்த்தியுள்ளனர். எனினும் இறுதியில் சரியான முறையில் சம்பளம் வழங்காமல் வெறுமனே பயனை மட்டும் பெற்றுக்கொண்டு அந்நிறுவனங்கள் ஊழியர்களை கைவிடக்கூடும். சட்டரீதியாக தொழிலாளிக்கும் தொழில் தருநருக்கும் இடையில் பிணைப்பின்மையே இதற்குக் காரணம்.

இவ்வாறு கைவிடப்படும் தொழிலாளி சட்ட உதவியையும் நாட இயலாது. சட்ட விரோதமாக நாட்டில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கே ஆளாக வேண்டிவரும். எனவே சுற்றுலா வீசாவில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தொழில் நிமித்தம் செல்லுபவர்கள் இதனை கவனத்தில் கொள்வது நல்லது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435