சேவை அனுமதிப்பத்திரத்தை மாற்றும் வாய்ப்பு குவைத்தில்

தமது தொழில் அனுமதிப் பத்திரத்தை மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பை குவைத் ஆளணி பற்றிய அதிகாரசபை வழங்கியுள்ளது.

விவசாயத்துறை, கைத்தொழில், மீன்பிடி மற்றும் செம்மறியாடு வளர்ப்பு ஆகியவற்றில் ஈடுபடுவோர் இம்மாற்றத்தை மேற்கொள்ள முடியும்.

ஆனால் இம்மாற்றத்திற்கு தத்தமது தொழில் வழங்குநர்களின் அனுமதியை அவசியம் பெற்றிருத்தல் வேண்டும். தாம் ஈடுபட்டுள்ள அதே துறையில் 300 குவைத் டினார் வழங்கி இம்மாற்றத்தை மேற்கொள்ள முடியும்.

இக்கோரிக்கைகள் தொடர்பில் விசேட குழுவொன்றினால் ஆராயப்படுவதுடன், அவர்களின் தீர்மானத்திற்கு அமைய கோரிக்கையின் அனுமதி தங்கியுள்ளது. இதற்கு முன்னர் ஒருவருட வேலைக்காலத்தை பூர்த்தி செய்த பின்னர் சேவை அனுமதிப்பத்திரத்தை மாற்றும் வாய்ப்பு தனியார்துறைக்கு வழங்கப்பட்டிருந்தது. என்றபோதிலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான மேற்கூறப்பட்ட துறைகள் புதிய சட்டத்தினூடாகவே உள்வாங்கப்பட்டுள்ளன.

இதில் ஒருவருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்தல் என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களாகிய உங்களுக்கும் தற்போது சேவை அனுமதிப்பத்திரத்தை மாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435