தனியார் வாகன ஓட்டுநர் பயிற்சி அனுமதிக்கப்படவில்லையென்றும் அவ்வாறு பயிற்சி பெறுபவர்களுக்கு 10,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்றும் டுபாய் வீதிகள் மற்றும் போக்குவரத்து அதிகாரசபை (RTA) அறிவித்துள்ளது.
அனுமதிப்பத்திரம் இல்லாத வாகனங்களில் சாரதி ஓட்டுநர் பயிற்சி வழங்கப்படுமாயின் 5,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பல தனியார் நிறுவனங்கள் 50 – 100 திர்ஹம் கட்டணத்துடன் சாரதி ஓட்டுநர் பயிற்சிகள் வழங்குவதாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. பலர் அச்சட்டவிரோத பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். அனுமதி பெற்ற சில ஓட்டுநர் பயிற்சி நிலையங்கள் உள்ளன ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ளன. அவற்றின் கட்டணம் அதிகமாக இருக்கலாம்.
எனினும் அவற்றில் பயிற்சிகளைப் பெறுவதே சிறந்தது என்று அதிகாரசபை தெரிவித்துள்ளது.