டுபாயில் புலம்பெயர் தொழிலாளருக்கான விசேட பயிற்சித் திட்டம்

டுபாயில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்களுடைய உரிமைகள் மற்றும் சட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கான  பயிற்சிச் திட்டமொன்றை டுபாய் தொழிலாளர் விவகாரத்திற்கான நிரந்தர குழு ஆரம்பித்துள்ளது.

டுபாயில் பணியாற்றும் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களையும் உள்ளடக்கும் வகையில் 3 கட்டங்களாக பயிற்சிகளை வழங்குவதற்கு டுபாயிலுள்ள பயிற்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய கிழக்கு நிலையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தொழிலாளர் விவகாரத்திற்கான நிரந்தர குழு கைச்சாத்திட்டுள்ளது.

சுமார் 200 இன மக்கள் வாழும் டுபாயில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த பயிற்சி மிகவும் அவசியமானது என்று சுட்டிக்காட்டியுள்ள டுபாய் தொழிலாளர் விவகாரத்திற்கான நிரந்தர குழுவின் தலைவர், இப்பயிற்சியானது மனித உரிமை பாதுகாப்பிற்கான சர்வதேச சட்ட திட்டங்களை பாதுகாக்கும் வகையில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் டுபாய் மூலோபாயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

முதற்கட்டமாக, புலம்பெயர் தொழிலாளர்களை பயிற்சியளிக்கும் பொறிமுறையை உருவாக்குவதும் இரண்டாம் கட்டாக 2017ஆம் ஆண்டில் மேலதிக பயிற்சி வழங்குவதும் மூன்றாம் கட்டமாக 2018ஆம் ஆண்டில் அனைத்து புலம்பெயர் பணியாளர்களுக்கும் இப்பயிற்சியை கட்டாயமாக்குவதும் இக்குழுவின் திட்டமாகும்.

இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதுடன் வாரத்திற்கு 5 நாட்கள் ஆங்கிலம், அராபி, உருது ஆகிய மொழிகளில் கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளன.

இக்கருத்தரங்குகள் இரவு 7 மணிக்கு பின்னர் 45 நிமிடங்கள் நடத்தப்படவுள்ளன. சுமார் 200 இனங்கள் வாழும் டுபாயில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களாகிய நீங்களும் இப்பயிற்சியில் கலந்துகொள்ளுங்கள். இதனூடாக தொழில்ரீதியான பாதுகாப்பு மேம்படுத்தப்படும். டுபாயில் பணியாற்றும் ஏனைய தொழிலாளர்களுக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்துங்கள்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435