இணைய தொழிற்சந்தையை உருவாக்கிய ஐக்கிய அரபு இராச்சியம்

இணையத்தினூடான தொழிற்சந்தை வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது ஐக்கிய அரபு இராச்சியம்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொழில்வாய்ப்பை விரும்பும் உள்நாட்டவர், வௌிநாட்டவர்கள் இவ்விணையதளத்தில் தமது சுயவிபரக்கோவையுடன் தனிப்பட்ட பைலை திறக்க முடியும் என்கிறது அந்நாட்டு மனித வள அமைச்சு.

அவ்விணைய தொழிற்சந்தையில் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளையும் கண்டறிய முடியும். careers.mohre.gov.ae இணையதள முகவரியினூடாக அத்தொழில்வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும் முடியும்.

தொழில்வாய்ப்புக்களை பதிவு செய்யவும் கண்டறியவும் இது ஒரு புதிய தளமாக இருக்கும் என்கிறார் தொழில் அலுவல்களுக்கான உதவி துணைச்செயலாளர் அயேஷா மொஹம்மட் அஹமட் பெல்ஹார்பியா.

இப்புதிய இணைய வாய்ப்பானது தகமைகளையும் தொழில்விளம்பரங்களையும் ஒப்பிட்டு பார்க்கவும் நிறுவனங்கள் தொழில் தேடுவோரின் கோப்புகளை பார்வையிடவும் உதவியாக இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 2017ம் ஆண்டு மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 6.4 மில்லியன்களாகும் என 2018ம் வருட பொருளாதார ஆண்டறிக்கை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435