நூறு தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கு தென்கொரியாவில் பயிற்சி

தெரிவு செய்யப்பட்ட 100 தொழில்நுட்ப ஆசிரியர்கள் தென்கொரியாவில் பயிற்சிகளை பெறுவதற்காக வாய்ப்பை பெற்றுள்ளனர் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

தென்கொரியாவின் கொய்க்கா நிறவனம் இவ்வாய்ப்பை ஆசிரியர்களுக்கு வழங்க முன்வந்துள்ளது என்று இலங்கைக்கான தென்கொரிய நிரந்தர வதிவிட பிரதிநிதி லீ டொங் கூ தெரிவித்தார் என்று கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் கல்வி அமைச்சில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசமிற்கும் இலங்கைக்கான தென்கொரிய நிரந்தர வதிவிட பிரதிநிதிக்கும் இடையிலான சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை பாடசாலைகளில் கற்பிக்கும் தொண்டர் ஆசிரியர்களுடைய பிரச்சினைகளை அடையாளங்காண்பதற்கும் கொய்க்கா நிறுவனம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இச்சந்திப்பின் போது கல்வியமைச்சின் செயலாளர் டப்ளியு.எம்.பந்துசேன, மேலதிக செயலாளர் எச்.யு பிரேமதிலக்க (கல்வி தர அபிவிருத்தி) உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435