குவைத் கட்டுப்பாட்டு அதிகாரசபையினால் நிதிபரிமாற்றம் தொடர்பில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய 3000 டினாருக்கு அதிகமான தொகைக்கும் அதிகமான பணப்பரிமாற்றத்திற்கு அந்நிதி எவ்வாறு பெறப்பட்டது என்பதை உறுதி செய்வது அவசியம்.
நாட்டு எல்லைகளைக்கடந்து சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஆசிய மற்றும் அரபி பிரஜைகள் ஈடுபடுவதை தடுக்கவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்நாட்டு கட்டுப்பாட்டு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அவ்வாறு பண மூலம் தொடர்பில் உறுதிப்படுத்த தவறும் பட்சத்தில் 106/2013 சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம்.
மேலும் நன்கொடை சேவைகளுக்காக பணம் சேகரிப்பதற்கும் புதிய சட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்பதை புலம்பெயர் தொழிலாளர்களாகிய நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். உங்களுடன் பணியாற்றும் ஏனைய நன்பர்களுக்கும் இது பற்றி தெளிவுபடுத்துங்கள். இதனூடாக தேவையற்ற அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள முடியும்.
வேலைத்தளம்