எமிரேட்ஸ், எடிஹட் மற்றும் ப்ளைடுபாய் ஆகிய விமான சேவைகளில் குறிப்பிட்ட வகையான மெக்புக் மடிக்கணனிகளை கொண்டு செல்வதை தடை செய்துள்ளது,
இவ்விடயம் தொடர்பான அறிவித்தல் நேற்று (08) விமானசேவை நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் வௌியிடப்பட்டது.
குறித்த வகை கணனிகளின் பெற்றிகள் அதிகம் சூடாகி வெடித்து தீயை உண்டாக்குவதாகவும் அநாவசியமான விபத்துக்களைத் தவிர்ப்பதற்கே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இப்பிரச்சினை காரணமாக பெற்றிகளில் பிரச்சினை இருப்பதனால் குறித்த திட்டத்தை மீளப் பெறுவதாக அப்பிள் நிறுவனம் உலகளாவிய ரீதியில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.