கட்டாரில் பணியாற்றுபவர்கள் புதிய இடத்தில் பணி செய்ய விரும்புவதாயின் கீழ்வரும் சட்ட திட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது பணியாற்றும் தொழில் தருநரின் கீழ் இரு வருடங்கள் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்
முதல் எஜமானரிடமிருந்து ஆட்சேபனையின்மை (No Objection Certificate (NOC)) சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
புதிய தொழில் தருநரின் ஆட்சேர்ப்புக்கான அனுமதி பெற்றிருத்தல் வேண்டும்
தற்போதைய தொழில் தருநர், புதிய தொழில் தருநர் மற்றும் ஊழியர் இணக்க சான்றிதழில் (sponsorship transfer form) கையெழுத்திட வேண்டும்.
புதிய மற்றும் முன்னைய தொழில் தருநர்களின் கையெழுத்து உறுதிப்படுத்தப்படவேண்டும்
புதிய தொழில் தருநரின் கீழ் பணியாற்றுவதற்கு செல்வதற்கு கீழ்வரும் வகையில் கட்டணம் அறிவிடப்படுகிறது.
முதற் தடவை தொழில் செய்யும் இடத்தை மாற்றுவதற்கு- நிறுவனங்கள் 2000 கட்டார் ரியால்- தனிநபர் 1000 கட்டார் ரியால்
இரண்டாம் தடவை தொழில் செய்யும் இடத்தை மாற்றுவதற்கு- நிறுவனங்கள் 2500 கட்டார் ரியால்- தனிநபர் 1500 கட்டார் ரியால்
மூன்றாவது அதற்கு மேற்பட்ட தடவைகள் தொழில் செய்யும் இடத்தை மாற்றுவதற்கு நிறுவனங்கள்- 3000 கட்டார் ரியால்- தனிநபர் 2000 கட்டார் ரியால்
மேலதிக தகவல்களை http://www.qatarday.com/blog/legal/how-to-change-sponsorship-in-qatar/14615#sthash.9dgqufRE.dpuf என்ற இணைய தள முகவரியில் பிரவேசித்து பெற்றுகொள்ளலாம்.
வேலைத்தளம்
இத்தகைய சட்ட திட்டங்களை புலம்பெயர் தொழிலாளர் அறிந்து செயற்படுவது அவசியம். அல்லது தேவையில்லாத பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியேற்படும்