விடுறையின் பின்னர் வேலைக்கு சமூகமளிக்காவிட்டால்…

புலம்பெயர் தொழிலாளர்கள் விடுமுறையில் தமது நாட்டு சென்று சரியான காரணங்கள் தெரிவிக்காது மீண்டும் தொழிலுக்கு வர தாமதிப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக எஜமானர்கள் முறைப்பாடு செய்ய முடியும் என்று அந்நாட்டு மனித வள தொடர்பான பொது அதிகாரசபை அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் குவைத்தில் பணியாற்றும் வெளிநாட்டுப் பணியாளர்கள் வருடாந்த விடுமுறையில் தமது சொந்த நாடுகளுக்கு செல்பவர்கள் மீண்டும் பணிக்கு வர தாமதமாகுமாயின் அதற்குரிய சரியான காரணங்களை அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கா விட்டால் பணியாளரை வழங்கிய முகவர் எஜமானருக்கு சரியான பதில் வழங்க வேண்டும்.

அவ்வாறில்லாவிடின் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்ய முடியும். அத்துடன் சேவை ஒப்பந்தத்தை இடை நிறுத்தவோ அல்லது அல்லது 6 மாதங்களுக்குள் பதிலளிக்கா விட்டால் குவைத் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்றவோ எஜமானருக்கு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435