மத்திய கிழக்கில் பரவும் புதுவகை நோய்

மத்திய கிழக்கு நாடுகளில் அடையாளங்காணப்படாத நோயொன்று பரவி வருவதாகவும் அந்நோய் சிறிய வகை கொசுக்களினால் பரவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தள்ளன.

இந்நோய் முதற்தடவையாக சிரியாவில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அந்நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்துள்ள மில்லியன் கணக்கான மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இத்தஞ்சம் கோருவோர் மத்திய கிழக்கு வலயத்திலிருந்து ஐரோப்பா வரையில் புலம்பெயர்வதனால் இந்நோய் லெபனான், துருக்கி, ஜோர்தான் மற்றும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவி வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மருத்து வசதிகள் வழங்கப்படாமையினால் நிலை கட்டுக்கடங்காமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நோய் தாக்கத்துக்குள்ளான நோயாளியின் முகத்தில் கொப்புளங்கள் தோன்றுவதுடன் கடுமையான நோவையும் ஏற்படுத்துகிறது. ஐஎஸ் தீவிரவாதிகள் சடலங்களை வீதிகளில் வீசிச் செல்வதனால் இத்தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இதனை வேறு சில ஆய்வாளர்கள் மறுத்துள்ளனர்.

எவ்வாறாயிருப்பினும் மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் புலம்பெயர் மக்கள் இது தொடர்பில் தெளிவான அறிவை பெற்றிருப்பதுடன் இந்நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காமையினால் பாதுகாப்பாக இருக்குமாறும் கோரப்படுகிறீர்கள்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435