
சீனாவில் ஆரம்பமான கோவிட் 19 நாடு முழுவதும் பரவியுள்ள நிலையில் தற்போது மத்திய கிழக்கு நாடுகளிலும் தற்போது பரவியுள்ளது.
இந்நிலையில் தமது நாட்டிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக குவைத் மற்றும் பஹ்ரேய்ன் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
குவைத்தில் மூன்றுபேர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, பஹ்ரைனில் ஒருவர் அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.