லிந்துல தோட்டத் தொழிலாளர்கள் தீபாவளி கொண்டாடக் கூடாதா?

​தீபாவளி கொடுப்பனவை வழங்க தோட்ட அதிகாரகள் மறுத்ததையடுத்து உடனடியாக வழங்குமாறு கோரி நேற்று (21) லிந்துல தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏனைய தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு தீபாவளி கொடுப்பனவு கொடுத்திருந்த போதிலும் லிந்துல தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் வழங்க தோட்ட நிர்வாகம மறுத்துள்ளதாக கூறி தொழிலாளர்கள் இக்கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்து.

தோட்ட தொழிலாளர் தீபாவளி கொடுப்பனவை வாங்கும் நோக்கில் கடந்த 20ஆம் திகதி அலுவலகத்திற்கு சென்ற போது தோட்ட அதிகாரி பணத்தை வைப்பிடாமையினால் வழங்க முடியாதுள்ளதாக தெரிவித்ததாகவும் பண்டிகைக் கொடுப்பனவுக்காக தமது சம்பளத்தில் கழிக்கும் பணத்தை கொடுப்பதற்கும் நிர்வாகம் தவறியுள்ளதாகவும் அத்தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தோட்ட அதிகாரி வைப்பிலிட்டால் 24ஆம் திகதி வழங்குவதாக தெரிவித்தபோதிலும் 24ஆம் திகதி பணத்தை பெற்று தமது பண்டிகைத் தேவைகளை பூர்த்தி செய்ய காலம் போதாது என்றும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435