
மீண்டும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 24ம் திகதி நாடு தழுவியரீதியில் 24 மணி நேர வேலைநிறுத்தத்தை முன்னெடுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில் இரு வாரங்களில் மீண்டும் வேலைநிறத்தப்போவதாக வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தரம் குறைந்த மருந்துவகை, தற்போது மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான மருந்து தட்டுப்பாடு, பொருத்தமற்றவர்களுக்கு மருத்துவ பட்டமளிக்க முயல்கின்றமை, மருத்துவ கல்விக்காக ஆகக்குறைந்த தரத்தை சட்டமயமாக்காமை, உயர்கல்வி மற்றும் மருத்துவசபை இயக்கத்திற்கு முட்டுக்கட்டையாக உருவாக்கப்படவுள்ள உத்தேச ஆணைக்குழு சட்டம். மருத்துவர் இடமாற்றம் செயற்படுத்தப்படாமை, மருத்துவர் நியமனம் வழங்குவதில் ஏற்படும் தாமதம் உட்பட பல விடயங்களுக்கு அதிகாரிகள் உரிய பதில் வழங்கவில்லை என்று வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.