
இறுதி வருகை வீஸாவினூடாக நாட்டை விட்டு வௌியேறும் புலம்பெயர் தொழிலாளர் மூன்று வருடங்களுக்கு மீண்டும் நாட்டுக்கு திரும்ப முடியாது என்று சமூக வலைத்தளங்களில் வௌியாகியுள்ள வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
இறுதி வருகை வீஸாவினூடாக சொந்த நாட்டுக்கு திரும்பு எந்தவொரு புலம்பெயர் தொழிலாளரும் எவ்வித குற்றச்சாட்டுக்களிலும் உள்ளாகாதவராயிருப்பின் சவுதி அரேபியாவிற்கு வர முடியும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இக்வாமா எனப்படும் சவுதி அரேபியாவில் தங்கியிருந்து பணி செய்வதற்கான அனுமதி காலாவதியாக மூன்று தினங்களுக்கு முன்னர் புதுப்பிக்கப்படாவிடின் அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு கடவுச்சீட்டுக்கான பொது இயக்குநரகம் சுட்டிக்காட்டியுள்ளது.