வரலாற்றில் முதல்தடவை- லின்கன் கல்லூரி சுவரில் இலங்கையரின் உருவப்படம்

ஒக்ஸ்பேர்ட் பல்கலைகழகத்தின் கல்லூரிகளில் ஒன்றான லின்கன் கல்லூரியின் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவரை முதல் தடவையாக இலங்கை பெண்ணொருவரின் உருவப்படம் அலங்கரித்துள்ளது.

கடல் உயிரியல் நிபுணர், கடல் கல்வியாளர், வட இந்திய பெருங்கடலின் நீல திமிங்கில ஆராய்ச்சி முன்னோடி என பல பெருமைகளை தன்னகத்தே கொண்ட ஆஷா டிவொஸ் லிங்கன் கல்லூரிச் சுவரை அலங்கரிக்கும் முதலாவது இலங்கைப் பெண் என்ற பெருமையையும் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

இதோ அவருடைய கதை….

ஸ்கொட்லாந்தில் கடல் மற்றும் சுற்றாடல் தொடர்பான பட்டப்படிப்பை பூர்த்தி செய்த ஆஷா டிவொஸ், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான முதுமாணி கற்கை நெறியை தொடர்வதற்கான விண்ணப்பத்தை சிறு கூடாரத்தில் தங்கியிருந்து முகப்பு வௌிச்சத்தின் உதவியுடன் பல இரவுகள் கண்விழித்து தயார் செய்தார். பல போராட்டங்களின் பின்னர் முழுமையாக தயாரித்த விண்ணப்பப்படிவத்தை ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய சில மாதங்களில் நேர்முகத்தேர்வுக்கான அழைப்பைப் பெற்றார். இறுதியில் ஏமாற்றத்துடனும் கண்ணீருடனுமே அவர் திரும்பினார். கேள்விகள் அதிகம் கேட்கும் ஆண்கள் இருந்த குழுவிற்கே அவர் தனது வேலைகளை சமர்ப்பித்திருந்தார். எனினும் அறியாத அவர் அறியாத தலைப்புக்கள் தொடர்பில் அறியவேண்டும் என்ற அவருடைய அளவில்லா ஆர்வமும் ஆசையும் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்து கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த உயிரியல்துறை பட்டப்படிப்பில்  இணைந்துகொண்டதனூடாக தனது வெற்றிப் பயணத்தை ஆரம்பித்தார் ஆஷா டிவொஸ்.

லின்கன் கல்லூரியில் கல்வியை மேற்கொள்வதற்காக பெண்கள் உள்வாங்கப்பட்டதன் 40 வருட பூர்த்தியின் நிமித்தம் கல்லூரியின் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவரில் முன்னாள் மாணவர்களான 20 பெண்களின் உருவப்படங்களை பொறித்துள்ளது. 40 தசாப்தங்களாக பல திறமையான பெண்கள் அக்கல்லூரியில் கற்றிருந்தாலும் இலங்கையரான ஆஷா டிவொஸ் அந்த 20 பெண்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளார்.

ஆஷா தனது ஆரம்ப கல்வியை கொழும்பு மகளிர் கல்லூரியில் கற்றார். ஆரம்ப கல்வியை நிறைவுசெய்ததன் பின்னர், புனித அன்றுஸ் பல்கலைக்கழகத்தில் சமுத்திரவியல் மற்றும் சூழலியல் உயிரியலில் பட்டப்படிப்பை மேற்கொள்ளுவதற்காக ஸ்கொட்லாந்துக்குச் சென்றார். தொடர்ந்து அவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த உயிரியலில் முதுமானிப் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் PhD பட்டம் பெற்றார்.

இயற்கையைப் பாதுகாக்கின்ற சர்வதேச ஒன்றியத்தின் சமுத்திரவியல் மற்றும் கரையோர அலகில் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரியாக சேவையாற்றினார். அவர் 2008ஆம் ஆண்டு இலங்கை நீல திமிங்கில கருத்திட்டத்தை ஸ்தாபித்தார். அவர் IUCN இனங்கள் உயிர்வாழ் ஆணைக்குழுவின் கடற் பாலூட்டியினம் பற்றிய நிபுணர்கள் குழுவின் அழைக்கப்பட்ட அங்கத்தவராக இருந்தார். ஆஷா TED சிரேஷ்ட கல்வியாளராக, சமுத்திர பாதுகாப்பில் டியூக் பல்கலைக்கழகத்தில் உலக கல்வியாளராக சிறப்புப் பெற்றிருந்தார். அத்துடன் உலக் பொருளாதார ஒன்றியத்தினால் இளம் உலக தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார். 2013ஆம் ஆண்டு விஞ்ஞானவியல் வெளியீடுகளுக்காக அவர் ஜனாதிபதி விருது பெற்றார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435