விபத்து நிகழும் பகுதிகளில் மோட்டார் வாகனங்களை நிறுத்தினாலோ அல்லது பாதையை தடைபடுத்தினாலோ சாரதிகளுக்கு ஆயிரம் திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று ஐக்கிய அரபு இராச்சிய போக்குவரத்துத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அதிகாரிகள் கடமையை சரியான முறையில் முன்னெடுப்பதற்கு தடையாக இச்செயற்பாடுகள் அமையும் என்று சுட்டிகாட்டியுள்ள அதிகாரிகள் அப்பிரதேச மக்கள் விபத்து நடந்த இடத்தை சூழ்ந்துக்கொள்வதையும் தவிர்த்துக்கொள்ளுமாறு எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே விபத்துக்களை படமெடுப்பதோ அவற்றை சமூக வலைத்தளங்களில் தரவேற்றம் செய்வதோ சைபர் சட்டங்களை மீறும் செயல் என்று அறிவுறுத்தியுள்ள அந்நாட்டு பொலிஸார் அவ்வாறு செய்வோருக்கு சிறைத்தண்டனை அல்லது 150,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தமை குறிப்படத்தக்கது.