வீட்டுப் பணியாளருக்கு சட்டரீதியான முகவர்களை நாடுங்கள்!

வீட்டு வேலைக்கு வெளிநாட்டுப் பணியாளர்களை அமர்த்தும் போது சட்டரீதியாக பதிவு செய்யப்பட்ட முகவர் நிலையங்களை நாடுமாறு நாட்டு மக்களிடம் சவுதி அரேபிய தொழிலார்கள. மற்று சமூக அபிவிருத்தி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடக விளம்பரங்களை பார்த்து வீட்டுப் பணியாளர்களை பணிக்கு அமர்த்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரியுள்ளதுடன் அவ்வாறான சட்ட விரோத பணியமர்த்தல்கள் இடம்பெறுகிறதா என்பதை தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாக அமைச்சின் உயரதியாகாரியான டொக்டர் மொஹம்மட் பின் அப்துல் ரஹ்மான அல்- பாலித் தெரிவித்தார்.

விளம்பரத்தினூடாக வீட்டுப் பணியாளர்கள் அமர்த்தப்பட்டு துஷ்பிரயோகங்கள் நடைபெறுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுமானால் கலாசார மற்றும் தகவல் அமைச்சு தகுந்த நடவடிக்கை எடுக்க தவறாது என்றும் குற்றங்களுக்கேற்ப தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் சட்ட திட்டங்கள் தொடர்பில் தெளிவான அறிவை பெறுவதற்கு கூர்ந்து கவனிக்குமாறு ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அவர், சட்ட விரோதமாக விசா வழங்குதல் மற்றும் தொழிலாளர் சேவைகள் தொடர்பிலும் விளக்கம் பெறுமாறும் பணித்துள்ளார்.

சட்டரீதியான முறையில் பணியாளர்களை அமர்த்த www.musaned.gov.sa. இணையதளத்தை நாடுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435