இன்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலையினால் வாகனமோட்டும் போது அவதானத்துடன் இருக்குமாறு அந்நாட்டு பொலிஸார் உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தளத்தில் செய்தி வௌியிட்டுள்ளனர்.
தூசு படிந்த காற்று வீசுவதனால் பாதைகள் 2000 மீற்றருக்கும் குறைவான தூரம் தௌிவற்றதாக காணப்படும் சாத்தியம் உள்ளமையினால் அவதானத்துடன் வாகனம் செலுத்துமாறு மோட்டார் வாகன சாரதிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, டுபாய் நோக்கிய பயணத்தின்போது வீதி தௌிவின்மை காரணமாக விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக சார்ஜா பொலிஸ் தனது உத்தியோகப்பூர்வ டிவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.
குறிப்பாக டுபாய் செல்ல பயன்படுத்தப்படும் அல் இத்திஹர் இல் பயணிக்கும் அவதானத்துடன் இருக்குமாறும் அல்லது மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் சார்ஜா பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.