2 மாம்பழங்களை திருடியவருக்கு 5,000 திர்ஹம் அபராதம்

டுபாய் நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவுக்கு அனுப்பப்படவிருந்த சரக்குத் தொகுதியில் இருந்த 6 திர்ஹம் பெறுமதியான இரு மாங்காய்களை திருடிய டுபாய் விமானநிலைய ஊழியர் ஒருவருக்கு 5,000 திர்ஹம் அபராதமும் மூன்று மாத சிறைத் தண்டனையும் விதித்து தண்டனை காலம் முடிந்தவுடன் உடனடியாக நாடுகடத்துமாறும் டுபாய் நீதிமன்றம் நேற்று (23) தீர்ப்பளித்துள்ளது.

இந்நபர் கடந்த 2017ம் ஆண்டு இச்சம்பவம் நடந்துள்ளது. எனினும் ஏன் 2019 ஆண்டு அவர் நீதிமன்ற தீர்ப்பிற்குள்ளாகினார் என்பது குறித்த தகவல்கள் வௌியாகவில்லை.

குறித்த நபர் சம்பவம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் டுபாய் விமாநிலையத்தின் மூன்றாம் இலக்க வாயிலில் பொதிகளை சுமக்கும் பணியில் ஈடுபட்டுவந்தவர்.

இச்சம்பவம் கடந்த 2017ம் ஆண்டு நடந்தது. கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொலிஸ் சம்மன் அனுப்பியிருந்தது பின்னர் விசாரணைகளை மேற்கொண்டது. வீட்டுக்கு வந்து தேடுதல் நடத்தியது. திருட்டுப் பொருட்கள் எதுவும் அங்கு கைப்பற்றப்படவில்லை.

ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் கமராக்களை ஆய்வு செய்த போது குறித்த நபர் இந்தியா செல்லும் விமானத்தில் பயணிக்கவிருந்த இந்திய பயணிகளின் பைகளை திறந்து தேடியது பதிவாயிகியிருந்ததாகவும் அதன் பின்னர் தமக்கு முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் குற்றத்தை மறுத்தபோதிலும் அவருக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பிரதிவாதிக்கு 15 நாட்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435