காலி, மஹமோதர வைத்தியசாலை பணிப்பாளருடைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மருத்துவமனை தாதியர் இன்று (01) ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.
காலி- கொழும்பு பிரதான வீதியை மறித்து மேற்கொள்ளப்பட்ட இவ்வார்ப்பாட்டமானது பொலிஸாரின் தலையீட்டையடுத்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தினால் ஏற்பட்ட பாரிய வாகன நெரிசலை நீக்க பொலிஸார் மேற்கொண்ட முயற்சியின் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதமும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வேலைத்தளம்/ அத தெரண