
குவைத் தொழிலாளர் சட்டவிதிகளை மீறி வீட்டுப் பணியாளர்களாக பணிபுரிந்த 573 வௌிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு மனிதவலு மற்றும் உள்நாட்டு விசாரணை அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தொழில்வழங்குநர்கள் அவர்களை மனித கடத்தலினூடாக குவைத்துக்கு அழைத்து வந்திருக்கலாம் என்று அவ்வதிகாரசபை சந்தேகம் வௌியிட்டுள்ளது.
ஏப்ரல் மாத ஆரம்ப பகுதியில் இருந்து நடத்தப்பட்ட தேடுதல்களில் தனியார் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பணியாற்றிய நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரும்பாலானவர்கள் ஜஹ்ரா பகுதியிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாரால்? எவ்வாறு? எவ்வளவு பணம் கொடுத்து குவைத்துக்கு அழைத்து வரப்பட்டனர் என்பது குறித்த விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.