வட்ஸ்அப் ஊடாக அழைப்புகளை எடுப்பதற்குள்ள தடை விரைவில் நீக்கப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
VoIP அழைப்புக்களை தடை செய்த ஐக்கிய அரபு இராச்சிய அரசு பதிலாக Botim, C’Me மற்றும் HiU Messenger செயலிகளை அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்துமாறு வலியுறுத்தியதையடுத்து வட்ஸ்அப் உட்பட பல சமூக வலைத்தளங்களினூடாக அழைப்புகள் தடுக்கப்பட்டது.
தற்போது வட்ஸ்அப்புடன் பலநோக்கங்களூடான புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளமையினால் விரைவில் அத்தடை நீக்கப்படும் என்று தாம் கருதுவதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய இலத்திரனியல் பாதுகாப்பு அதிகாரசபை (Nesa) தலைவர் மொஹமட் அல் குவைட்டி தெரிவித்தார்.